அதில் அவர் பேசியதாவது:-
காசநோய்க்கு எதிராக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
காசநோயை கண்டறியும் தோல் பரிசோதனை ஒன்றை இந்தியா உருவாக்கி உள்ளது. ‘சி-டிபி’ என்று அழைக்கப்படும் இச்சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இச்சோதனை, இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.
காசநோய் அதிகம் உள்ள நாடுகளுக்கு இந்த பரிசோதனை கருவி பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், காசநோய் பாதித்தவர்களை தத்தெடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :