இரண்டாம் திருமணத்திற்கு பின் இமான் போட்ட ‛மியூசிக்' – முதல் மனைவி இரைச்சல்

இசை அமைப்பாளர் இமான் தன் முதல் மனைவியை விவாரத்து செய்த நிலையில் தற்போது சினிமா டிசைனர் உபால்டுவின் மகள் அமலியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் இமானின் இரண்டு மகள்களும் கலந்து கொள்ளவில்லை.

திருமணம் மற்றும் தனது மகள்கள் பற்றி இமான் கூறுகையில், ‛‛மறைந்த பிரபல கலை இயக்குனர் உபால்டின் மகள் அமலியை மறுமணம் செய்துள்ளேன். இந்த திருமணம், முழுக்க முழுக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திருமணம். கடந்த சில வருடங்களாக எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட அனைத்து சவால்களுக்கும் முக்கிய தீர்வாக இந்த திருமணம் அமைந்தது.

அமலியின் மகளான நேத்ரா, இனி எனது மூன்றாவது மகள். நேத்ராவின் தந்தையாக இருப்பது, அளவிலாத மகிழ்ச்சியை எனக்கு தந்துள்ளது. எனது இந்த திருமணத்தில், எனது மகள்கள் வெரோனிகா மற்றும் பிளெஸிக்காவால் கலந்து கொள்ள முடியாது போயுள்ளது. அவர்களை இத்தருணத்தில் பெரிதும் மிஸ் செய்கிறேன். அவர்கள் என்னிடம் விரைவில் வருவதற்காக, பொறுமையுடன் காத்திருக்கிறேன். அவர்கள் இருவருக்கும் நான், என் மனைவி அமலி மற்றும் எங்கள் மகள் நேத்ரா, எங்கள் உறவினர்கள் என அனைவரும் எங்கள் அன்பை கொடுக்க காத்திருக்கிறோம். என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டியர் இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலா ஒரு மகளை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த இரு பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.