அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஸ் புஷ், தவறுதலாக ஈராக் மீதான புடின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்தது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
2003 ஆம் ஆண்டு 9/11 பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஈராக் மீதான படையெடுப்பிற்கு தலைமை தாங்கிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ், தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள புஷ் ஜனாதிபதி மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார்.
ரஷ்யாவில் நடக்கும் தேர்தல்களில் மோசடி நடந்துள்ளது, எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நீக்கப்டுகின்றனர்.
இதன் விளைவாக ரஷ்யாவில் அதிகாரம் ஒரு தனிநபரின் பிடியில் சிக்கியிருக்கிறது.
Former President George W. Bush: “The decision of one man to launch a wholly unjustified and brutal invasion of Iraq. I mean of Ukraine.” pic.twitter.com/UMwNMwMnmX
— Sahil Kapur (@sahilkapur) May 19, 2022
எமன் வாயிலிருந்து மகன் பேரறிவாளனை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறார் அற்புதம்மாள்! வைகோ
ஈராக் மீது கொடூரமான மற்றும் முற்றிலும் நியாயப்படுத்த முடியாத படையெடுப்பதற்கு ஒரு தனி மனிதன் எடுத்த முடிவு கண்டனத்திற்குரியது என பேசிய புஷ், உடனே தவறை உணர்ந்து, உக்ரைன் என குறிப்பிட்டார்.
பின், 75 என தனது வயதை குறிப்பிட்ட உடன் அந்த மையத்தில் சிரிப்பலைகள் ஏற்பட்டது.