உங்கள் தினசரி சரும பிரச்சனைகளை தீர்க்கும் தயிர்.. எப்படி யூஸ் பண்றதுனு பாருங்க!

தற்போது கோடைக்காலம் நம் கதவுகளைத் தட்டிக் கொண்டிருப்பதால், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப சரும பராமரிப்பை மாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பிரதான உணவாக இருக்கும் தயிர், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அத்துடன் தோல் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது.

தயிர் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது, சருமத்தை மேம்படுத்துகிறது, இதில் நல்ல அளவு கால்சியம், பி-12 மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

நல்ல பழைய தயிர், மற்ற இயற்கை பொருட்களுடன் சேர்த்து, தோலில் தடவும் போது, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பளபளப்பாகவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தோல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.

உங்கள் சருமத்தை அழகுபடுத்த, நீங்களே வீட்டில் சொந்தமாக செய்யக்கூடிய சில எளிய ஃபேஸ் பேக்ஸ் இங்கே உள்ளன. படிக்கவும்.,

புளித்த தயிர் ஃபேஸ் பேக்

பச்சை தயிர் அல்லது புளித்த தயிர் நீங்கள் முகத்தில் தடவக்கூடிய சிறந்த பொருட்களில் ஒன்றாகும். அதன் சுத்திகரிப்பு பண்பு உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்கும், அதன் இறந்த செல்களை அகற்றும். 2-3 ஸ்பூன் பச்சை தயிரை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவினால் முகப்பரு பிரச்சனைகள், சுருக்கங்கள் மற்றும் பிற விஷயங்கள் குறையும்.

தயிர், வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

இந்த மூன்று பொருட்களும் எப்போதும் உங்கள் வீட்டில் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், 2 டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு மசித்த வாழைப்பழம் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் அனைத்தையும் ஒன்றாக கலக்க வேண்டும். இப்போது பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும், தினமும் இதைச் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் வழக்கமான பயன்பாடு உங்கள் முகத்தை இயற்கையாக பிரகாசிக்கச் செய்யும்.

தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்

தனித்தனியாக, இவை அனைத்தும் சருமத்திற்கு சிறந்தவை. இது எண்ணெய் நிறைந்த டி-ஸோன் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு தேக்கரண்டி தயிர், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதை பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்து முழுவதும் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, அது காய்ந்ததும் கழுவவும்.

கூந்தலுக்கு தயிர் எப்படி பயன்படுத்துவது?

செம்பருத்தி தூள், நெல்லிக்காய் தூள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு சேர்த்து ஒரு ஹேர் மாஸ்க்கை தயார் செய்து, ஒரு மென்மையான பேஸ்ட்டை உருவாக்கி, உங்கள் உச்சந்தலை முழுவதும் தடவவும். குறைந்தது 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு, பின்னர் ஷாம்பூவுடன் கழுவவும்.

செம்பருத்தி பொடியில் உள்ள அமினோ அமிலங்களின் அதிக உள்ளடக்கம், முடி வளர்ச்சியைத் தூண்டும் ஒரு சிறப்பு வகையான கெரட்டின் புரதத்தை உருவாக்குகிறது. நெல்லியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை உச்சந்தலையில் சுழற்சியை அதிகரிக்கின்றன மற்றும் முடி சேதத்தை குறைக்கின்றன. தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, இதில் நல்ல அளவு கால்சியம், பி-12 மற்றும் வைட்டமின் டி உள்ளது. அவை உச்சந்தலையில்  நோய்த்தொற்றுகளை குறைத்து, முடியை  கன்டீஷனிங் செய்கிறது.

இந்த குறிப்புகளை கண்டிப்பா டிரை பண்ணுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.