ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதையடுத்து ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் தங்களின் சட்டமன்ற தொகுதிகளுக்குச் சென்று, மக்கள் குறைகளைக் கேட்டுவரும்படி உத்தரவிட்டிருந்தார். ரோஜாதனது சட்டமன்ற தொகுதியான நகரியில் மக்களின் குறைகளைக் கேட்டுவந்தார்.
ஒவ்வொரு வீடாக விசாரித்து வந்தபோது, முதியவர் ஒருவரிடம், முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதா எனக் கேட்டார். அதற்கு அந்த முதியவர் உதவித்தொகை கிடைக்கிறது, ஆனால் வயதான காலத்தில் என்னைப் பார்த்துக்கொள்ளதான் யாருமில்லை, எனவே எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டார். முதியவரிடமிருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத ரோஜாவும், சுற்றி இருந்தவர்களும் உடனே சிரித்து விட்டனர். அதன் பிறகு முதியவரிடம் அரசினால் உதவித்தொகை மட்டுமே வழங்கி உதவ முடியும், திருமணமெல்லாம் செய்து வைக்க முடியாது என பதில் அளித்தார்.
முதியவரின் இந்தக் கோரிக்கை அந்த இடத்தில் சிறிது நேரம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.