எலான் மஸ்க் டூப்புக்கு நடந்த கொடுமை பார்த்தீங்களா.. டிக்டாக்-ல் புலம்பல்..!

எலான் மஸ்க் என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், சமீபத்தில் டிவிட்டர் டீல், இன்னும் சிலருக்கு X.com ஆன்லைன் வங்கி சேவை நிறுவனம்.

எலான் மஸ்க்-கிற்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள், பாலோவர்கள் இருப்பது போலவே எலான் மஸ்க் போலவே முகம் கொண்ட சீனர் ஒருவர் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இவருக்கும் டிக்டாக் தளத்தில் பல கோடி ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது சீன தளத்தில் இருந்து இவர் முடக்கப்பட்டு உள்ளது.

எலான் மஸ்க் டூப்பு

எலான் மஸ்க்-ஐ போலவே இருக்கும் சீனரான யிலோங் மா (Yilong Ma), டிக்டாக் மற்றும் வெய்போ தளத்தில் தடை செய்யப்பட்டு உள்ளார். யிலோங் மா முதல் டிக்டாக் வீடியோவே மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் நவம்பர் 2020 முதல் இவர் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தார்.

 யிலோங் மா

யிலோங் மா

இந்நிலையில் டிக்டாக்-ன் சீன பதிப்பான Douyin மற்றும் டிவிட்டர் போன்ற சமுக வலைத்தளமான வெய்போ ஆகிய தளத்தில் யிலோங் மா தடை செய்யப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் அனைத்துப் பதிவுகள், வீடியோக்கள் நீக்கப்பட்டும் உள்ளது.

 Douyin மற்றும் வெய்போ
 

Douyin மற்றும் வெய்போ

Douyin மற்றும் வெய்போ தளத்தின் கொள்கைகளை யிலோங் மா மீறுவதாகக் கூறி தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதேவேளையில் Douyin-ன் சர்வதேச வெர்ஷன் ஆன டிக்டாக்-ல் யிலோங் மா Elong Musk என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளார். இந்தக் கணக்கில் இருக்கும் வீடியோக்கள் அனைத்தும் உள்ளது. டிக்டாக் தளத்தில் 2,39,000 பாலோவர்களையும், 3.9 மில்லியன் லைக்-குகளையும் பெற்றுள்ளார் யிலோங் மா.

deepfakes சந்தேகம்

deepfakes சந்தேகம்

பல முறை யிலோங் மா தான் எலான் மஸ்க் என்பது போலவே சித்தரித்துக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது குறித்தும், டெஸ்லா கார் குறித்தும் பதிவிட்டார். இதைப் பலர் எலான் மஸ்க்-கிற்கு டேக் செய்த நிலையில், எலான் மஸ்க் இவர் உண்மையாக இருந்தால் நான் பார்க்க விரும்புகிறேன் என்றும், இன்று பல deepfakes இருக்கும் காரணத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

2 எலான் மஸ்க் எப்படியிருக்கும்..?

2 எலான் மஸ்க் எப்படியிருக்கும்..?

இதன் மூலம் யிலோங் மா கணக்குகளை Douyin மற்றும் வெய்போ தளத்தில் இருந்து deepfakes தொடர்பாகவும் நீக்கப்பட்டு இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ ஒரு எலான் மஸ்க் இருந்தாலே இவ்வளவு மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்றால் 2 எலான் மஸ்க் இருந்தால் எப்படியிருக்கும்..? மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk’s viral Chinese dupe Yilong Ma suspended from China’s versions of TikTok and Twitter

Elon Musk’s viral Chinese dupe Yilong Ma suspended from China’s versions of TikTok and Twitter

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.