மும்பை,
ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூரு அணிக்கு இருக்கிறது.மறுமுனையில், அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 67-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 6 பந்துகளில் 19 ரன்கள் (2 சிக்ஸ், 1 பவுண்டரி, ஸ்டிரைக் ரேட் 316.67) விளாசினார்.
இதனையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.