விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – நயன்தாரா மீண்டும் இணைந்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ராம்போவாக விஜய் சேதுபதியும் கண்மணியாக நயன்தாராவும் கதீஜாவாக சமந்தாவும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார்கள். குறிப்பாக, செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கிய சமந்தாவுக்கு இது செம்ம கம்பேக்தான். அந்தளவிற்கு எல்லா கால கிட்ஸ்களும் கொண்டாடினார்கள்.
அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து இன்ஸ்டா ரீல்ஸில் தெறிக்கவிட்டன. உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட்’ மூவிஸ் வெளியிட்ட இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியாகி சில நாட்கள் கழித்து வரும் மே 27 ஆம் தேதி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இதனை உற்சாகமுடன் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.