கடனை அடைக்க முடியாத நிலையில் இலங்கை – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு



இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 5.5 பில்லியன் டொலர்கள் அடுத்த 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், பிரதமரிடம் உள்ள திட்டங்கள் என்னவென்றும் கேள்வியெழுப்பினார்.

இந்நிலையில், குழுக்கள் ஊடாக தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பிரதமரிடம் உறுதியளித்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்தவாரம் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் எனவும், சில விடயங்கள் தொடர்பில் தகவல் இல்லாமை மற்றும் தவறான தகவல்கள் இருப்பதால் உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

10 பில்லியனாக இருந்தாலும் அல்லது ஒரு பில்லியனாக இருந்தாலும் கடனை செலுத்த ஒரு மில்லியன் கூட இல்லை என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் வேலைத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.