கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஐநூற்று மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் சரவணன் (45). கூலி தொழிலாளியான இவர், தனது வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில், மாடுகளை மேய்த்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை முதல் குளித்தலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது. அதோடு, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
ஐநூற்று மங்கலம் பகுதியிலும் திடீரென இடி, மின்னல் ஏற்பட்டது. அப்போது, மாடு மேய்த்துகொண்டிருந்த சரவணன் மீது இடி தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வருவாய்துறையினர் மற்றும் லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த கூலித்தொழிலாளி ஒருவர் இடிதாக்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.