ஜம்மு: ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், சர்வதேச எல்லை கோட்டிற்கு அருகே உள்ள வனப் பகுதியில், கடந்த மூன்று நாட்களாக, காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதை அணைக்கும் பணிகளில், தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், காற்று வேகமாக வீசியதால், மீண்டும் தீ பரவத் துவங்கியது. அப்போது, அந்த பகுதியில் பயங்கரவாதிகளால் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, ஐந்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின. எனினும், இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இதையடுத்து, ராணுவத்தின் உதவியுடன், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜம்மு: ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், சர்வதேச எல்லை கோட்டிற்கு அருகே உள்ள வனப் பகுதியில், கடந்த மூன்று நாட்களாக, காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதை அணைக்கும் பணிகளில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.