விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை விசாரிக்க 4 நாட்கள் காவல் வழங்கி டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 263 சீன தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு விசா நீட்டிக்கப்பட்ட வழக்கில் பாஸ்கர ராமனை சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய அதிகாரிகள் 2 வாரம் சிபிஐ காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்குப் பின் 4 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.