உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப இந்திய சமையல் அறையில் பலயன்படுத்தப்படும் அனைத்து மசாலா பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பலனை கொடுக்கிறது.
அதேபோல் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆரோக்கியமான பொருள் தேன். சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் தேன் அதிக ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்தக்களும், வைட்டமின்களும், தாதுக்கனும் நிறைந்துள்ளது. இவை உடல் நோய் தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் அடங்கியுள்ள இந்த தேனை மற்றொரு ஆரோக்கிய பொருளாக பெருங்காயத்தூளுடன் இணையத்து சாப்பிட்டால் பல்வேறு சிக்கல்கள் தீர்க்க வழி செய்யும். காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் பெருங்காயத்தூள் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடும்போது உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை எரிக்கும். உடலின் மெட்டபாலிசத்தை சரி செய்யும்.
.வயிற்று உப்பசத்தால் அவதிப்படும்போது தேனில் பெருங்காயத்தூளை கலந்து சாப்பிட்டால் உடனடி நன்மை கிடைக்கும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு உடனடி நிவாரணத்தை கொடுக்கிறது.
அசிடிட்டி தொல்லையை அனுபவித்து வருபவர்கள் ஒரு பேனில் சிறிதளவு பெருங்காயத்துளை சூடேற்றி அதில் தேன் சேர்த்து சாப்பிட்டால் அசிடிட்டியில் இருந்து உடனடியாக விடுபடலாம். தேனில் பெருங்காயத்தூளை கலந்து சாப்பிடும்போது வயிற்றுவலி பறந்துபோகும் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிதளவு தேன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயத்தூள் தேன் கலவையை சாப்பிடும்போது செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும். உணவு நன்றாக செரிக்கப்பட்டு சத்துக்கள் உரிஞ்சப்படும் உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. முக்கியமாக இது வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைப் தீர்க்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“