கியான் வாபி மசூதி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு ஆணையம் இன்று தனது முழு அறிக்கையை தாக்கல் செய்தது.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதையடுத்து அங்கு களஆய்வு மேற்கொண்டு மே 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அறிக்கையை தயார் செய்யும் பணிகள் முடிவடையாத காரணத்தினால் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டது.கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உதரவிட்டுருந்த நிலையில் 50% பணிகள் எஞ்சி இருப்பதால் கூடுதலாக 2-3 நாள் அவகாசம் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழுமை பெற்றுள்ள நிலையில் இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து சிறப்பு ஆணையத்தின் உதவி ஆணையர் விஷால் சிங் தெரிவிக்கும் போது, நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஆணையம் முழுமையான அறிக்கையை தயார் சமர்ப்பிக்கும். மேலும், ஏற்கனவே சிறப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த அஜய் மிஸ்ரா இம்மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதே நேரத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை என்பது 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மசூதியின் உட்புறங்களில் ஆய்வு செய்யப்பட்டவை என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM