கிரீன் கார்டுக்கு காத்திருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அமெரிக்காவில் கிரீன் கார்டுகளுக்கான அனைத்து விண்ணப்பங்களையும் ஆறு மாதங்களுக்குள் பரிசீலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள் பெரும் அளவில் பயனடைவார்கள்.

டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய 3 அதிகாரிகள்.. ஆட்டம் காணும் அஸ்திவாரம்..!

கிரீன் கார்டு என்பது நிரந்தர குடியுரிமை அட்டை ஆகும், இது அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான சான்றாக வழங்கப்படுகிறது.

 H-1B விசா

H-1B விசா

இப்போது, ​​H-1B விசா உதவியில் அமெரிக்காவிற்குச் செல்லும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் தான் கிரீன் கார்டு என்ற தற்போதைய குடியேற்ற முறையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

சென்ற நிதியாண்டு

சென்ற நிதியாண்டு

சென்ற நிதியாண்டில் மொத்தம் உள்ள 2,26,000 கிரீன் கார்டுகளில், 65,452 குடும்ப கிரீன் கார்டு மட்டுமே விநியோகிக்கப்பட்டது. மார்ச் மாதம் 436,700 நேர்காணல்கள் நிலுவையிலிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் அது 421,358 நேர்காணல்களாக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க மக்கள் தொகை கணிசமாக வளர்ந்தாலும், குடியேற்ற அமைப்பின் வேகம் மாட்டும் மாறவேயில்லை.

 

நேரம் குறைப்பு
 

நேரம் குறைப்பு

குடும்ப அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்கள் தொடர்பான அனைத்து படிவங்களையும் செயலாக்குவதற்கான சுழற்சி நேரத்தைக் குறைப்பதை இந்தப் பரிந்துரைகள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேகப்படுத்தல்

வேகப்படுத்தல்

2022, ஆகஸ்ட் மாதம் முதல் மூன்று மாதங்களில் கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான நேர்காணல்களைச் செயலாக்குவதற்கான திறனை 100% அதிகரிக்கவும், கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான விசா நேர்காணல்களை 150% அதிகரிக்கவும், முடிவுகள் வெளியிடும் நேரத்தை 150% அதிகரிக்கவும், தேசிய விசா மையத்தின் (NVC) மாநிலத் துறை வசதியைக் கூடுதல் அதிகாரிகளை நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களிடம் இருந்து 2,500 டாலரை கட்டணமாகப் பெற்றுக்கொண்டு கூடுதல் விண்ணப்பங்களைச் செயலாக்கவும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

 

ஒப்புதல்

ஒப்புதல்

ஆசிய அமெரிக்கர்கள், பூர்வீக ஹவாய் மற்றும் பசிபிக் தீவு மக்களின் உரிமைகள் குறித்த ஆலோசனைக் குழு பரிந்துரைகள் வெள்ளை மாளிகையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்பவர்கள் பெரும் பயனடைவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indian US Green Applicants Happy On US Panel Votes To Process Green Card

Indian US Green Applicants Happy On US Panel Votes To Process Green Card | கிரீன் கார்டுக்கு காத்திருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Story first published: Wednesday, May 18, 2022, 18:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.