கிருஷ்ணஜன்ம பூமியில் இருந்து ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் உள்ள கேசவ் தேவ் கோயிலை கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தாவும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா நிர்வாகக் குழுவும் நிர்வகித்து வருகின்றன. கிருஷ்ணஜன்ம பூமி இடம் மொத்தம் 13.37 ஏக்கரில் அமைந்துள்ளது.
கடந்த 1968-ம் ஆண்டில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இவ்விரு அமைப்புகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது.
இச்சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங்களுக்காக போடப்பட்டதாக கூறி அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு பின் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிருஷ்ணஜன்ம பூமியில் இருந்து ஷாஹி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுவை மதுரா நீதிமன்றம் ஒன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.