குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குற்றால அருவி அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து துவங்கி சீசன் துவங்கியுள்ளது.
இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் பாதுகாப்பு வளைவை தாண்டி அருவிகளில் தண்ணீர் விழுந்ததால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.