இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பரீட்சை நிலையங்களுக்கு வரும் மாணவர்களுக்காக சிசு செரிய பஸ்கள் மற்றும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
பரீட்சை பணியாளர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களின் நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரயிலில் வருகை தரும் மாணவர்களை புகையிரத நிலையங்களில் இருந்து பரீட்சை நிலையங்களுக்கு ஏற்றிச் செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.