சென்னையில் ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்காவை ஆர்.கே.நகர் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
ஆர்.கே.நகர் போலீசார் கொருக்குப்பேட்டை எழில் நகர் அருகே உள்ள சர்வீஸ் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்பொழுது அங்கு ஷேர் ஆட்டோவில் இருந்து மூட்டை மூட்டையாக பொருட்களை இறுகிக் கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்து அந்த மூட்டையை பிரித்து சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட பாக்கு வகைகள் மற்றும் ஆன்ஸ் புகையிலை இருப்பது தெரியவந்துள்ளது. இதில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.