ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக வாரணாசி கீழமை நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதியில் கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஹூசிபா அஹ்மதி (Huzefa Ahmadi) இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
அதேநேரம், இந்த வழக்கை நாளை விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வாதிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நாளை மதியம் 3 மணிக்கு நடைபெறும் என தெரிவித்த உச்சநீதிமன்றம், அதுவரை வாரணாசி கீழமை நீதிமன்றம் ஞானவாபி மசூதி வழக்கை நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.