புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி துணை நிலை ஆளுநராக பணியாற்றி வந்தவர் அனில் பைஜால். டெல்லி அரசில் நிர்வாக அதிகாரி யார்? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கா அல்லது கவர்னருக்கா என்பது குறித்து இருதரப்புக்கும் இடையே மோதல் போக்குவரத்து நீடித்தது. ஒன்றிய அரசுடனும் இதனால் ஆம் ஆத்மி மோதல் போக்கை கையாண்டது. இந்நிலையில் தான் அதிகார வரம்பு குறித்த உச்ச நீதிமன்றத்தில் தொரப்பட்ட வழக்கில் மிக முக்கிய தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். அதில், கவர்னருக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்றும் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இருப்பினும், கெஜ்ரிவால் அரசாங்கத்தின் நகர்வுகளை பைஜால் அவ்வப்போது வீட்டோ செய்வதோடும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கடுமையான கருத்துக்களால் பதிலடி கொடுப்பதன் மூலமும், முகநூல் தொடர்ந்து புகைந்து வருகிறது. இந்நிலையில், அனில் பைஜால், தனது பதவியை ராஜினாமா செய்தவாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.