தங்கம் விலை இன்றும் சரிவா.. எவ்வளவு குறைந்திருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?

நம் வீட்டுக்கு செல்லக் குழந்தைகளை கூட நம்மவர்கள் அன்பாக அழைப்பது தங்கம் என தான். அந்தளவுக்கு உணர்வுகளுடன் கலந்துள்ள விலைமதிப்புமிக்க உலோகமான தங்கம். இந்த தங்கம் விலையானது சமீபத்திய நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

ஆக இது தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி, சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண சந்தை என நிலவரம் வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. எவ்வளவு குறைஞ்சிருக்குன்னு பாருங்க!

 பணவீக்கம் VS தங்கம்

பணவீக்கம் VS தங்கம்

தங்கம் இன்றைய காலக்கட்டத்தில் போர்ட்போலியோவில் இருக்க வேண்டிய அவசியமான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் பார்க்கப்படுகிறது. ஆக சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

அமெரிக்காவின் மத்திய வங்கி உள்பட பல்வேறு மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 பத்திர சந்தை ஏற்றம்
 

பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் பணவீக்கத்தினை குறைக்க வட்டி விகிதத்தினை மீண்டும் அதிகரிக்கலாம் என கூறியிருந்தார். இது நிச்சயம் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தற்போது மீண்டும் டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது. பத்திர சந்தையும் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று காலை நிலவரப்படி சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 1.70 டாலர் குறைந்து, 1814.06 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு சற்று குறைந்து, 21.445 டாலராக காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று தொடக்க விலை கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on may 19th 2022: gold prices trade nearly 1800 dollar:

Gold prices are in decline in the international market today amid various factors.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.