திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 11-ம் வகுப்பு மாணவர் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.
சவேரியார் பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ரட்சகர், நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், 11-ம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன் ராபின், இன்று கணக்குப்பதிவியல் தேர்வை எழுதினார். பின்னர் அவர் வீட்டிற்கு சென்று தந்தைக்கு இறுதிச்சடங்குகளை செய்தார்.