இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய உயர் நீதிமன்றம் நேற்று (18) விடுதலை செய்தது.
பேரறிவாளனின் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் இனிப்பு வழங்கி விடுதலையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார்.
அதன்படி நேற்று (18) சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமது தாயாருடன் சென்று நேரில் சந்தித்த பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு தமது தாயாருடன் சென்று பேரறிவாளன் சந்தித்தார். அப்போது இருவரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி தெரிவித்தனர்
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பேரறிவாளன் சந்தித்தார். அவரது தாயார் அற்புதம்மாளும் உடன் இருந்தார்.
அப்போது தமது விடுதலைக்காக அதிமுக எடுத்து நடவடிக்கைகளுக்காக பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாளும் நன்றித் தெரிவித்துக் கொண்டனர்
பேரறிவாளன் சந்திப்பு குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்தை வென்று திரும்பியுள்ள சகோதரர் பேரறிவாளனை சந்தித்துக் கட்டியணைத்து நெகிழ்ந்தேன்.
சகோதரர் பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
பேரறிவாளன் இந்த கொலை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்தும் வெற்றி பெறவில்லை.
இதற்கிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக MSeu; ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்த நிலையில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார்.