தமிழகத்திற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ள சிறந்த நிறுவனங்கள் எது எது தெரியுமா?

தமிழகத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் என்பது பெருமைப்படுத்தும் அளவில் இருந்தாலும், தமிழகத்திற்கு என பெருமை சேர்த்த சில தமிழக நிறுவனங்களை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக பலவும் இருந்தாலும், இன்றளவிலும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிறுவனங்களாக மட்டும் அல்லாமல், பல ஆயிரம் பேருக்கு வாழ்வளிக்கும் நிறுவனங்களாகவும் உள்ளன..

சரவணபவன்

அண்ணாச்சி என்றாலே முதல் நியாபகத்திற்கு வருவது சரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் பி ராஜகோபால். இன்று உலமெங்கும் மக்கள் விரும்பி சாப்பிடும் இட்லிக்கு அரசனான இவர், தமிழகத்தில் 33-க்கும் மேலான ஹோட்டல்களையும், அண்டை நாடுகளையும் கொண்டுள்ளது. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, இன்று உலகளாவிய அளவில் மக்கள் விரும்பும் உணவகங்களில் ஒன்றாக வளர்த்தெடுத்தவர். அண்ணாச்சி தற்போது இல்லை எனினும் அவர் உருவாக்கிய சரவணபவன் என்றுமே தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவே இன்றளவிலும் உள்ளது. இந்த ஹோட்டலில் சுமார் 8,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதன் வருவாய் விகிதம் சுமார் 2900 கோடிக்கு மேல்.

 ஆச்சி குழுமம்

ஆச்சி குழுமம்

மசாலாக்களின் ராணியான ஆச்சி மசாலாவின் உரிமையாளர் பத்மசிங் ஐசக். தூத்துகுடியை சேர்ந்த இவரின் மசாலாவுக்கு இன்று இந்தியாவில் பல கோடி மக்கள் வாடிக்கையாளர்கள். இது பல ஆயிரம் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் ஆச்சி நிறுவனம், பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பகிர்ந்தளிக்கிறது. மசாலாவில் மட்டும் அல்ல இவரின் பங்கு ஜவுளித் துறையிலும் (Twin Birds) உண்டு. மொத்தத்தில் ஆச்சி மசாலா தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிறுவனங்களில் ஒன்று. இதன் வருவாய் விகிதம் கடந்த ஆண்டில் 500 கோடி ரூபாய்க்கு மேல். இங்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஹட்சன்
 

ஹட்சன்

இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஹட்சன். இதனை நிறுவனர் ஆர் ஜி சந்திரமோகன். இதன் தலைமையகம் சென்னையாகும். ஐஸ்கிரீமின் தந்தை என அழைக்கப்படும் சந்திரமோகன், ஆரம்பத்தில் ஐஸ்கிரீம் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்தார். எனினும் பின்னர் பால், தயிர், நெய், பன்னீர் என அடுத்தடுத்த பல பிராண்டுகளை உருவாக்கியுள்ளார். இங்கு சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதன் கடந்த ஆண்டு வருவாய் விகிதம் 6,300 கோடி ரூபாய்க்கு மேல்.

நல்லி சில்க்ஸ்

நல்லி சில்க்ஸ்

நல்லி சில்க்ஸ் நிச்சயம் பெண்கள் இதனை கேள்விபடாமல் இருப்பது கடினம். குறிப்பாக பட்டு புடவையை விரும்பும் பெண்கள் நல்லி சில்க்ஸ் பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. இன்று தமிழகத்தில் பட்டு புடவைக்கு பேர் போன பிரபலமான கடைகளில் நல்லி சில்க்ஸ்-ம் ஒன்று. இதனை நிறுவியவர் நல்லி குப்புசாமி செட்டியார். இந்தியாவில் மட்டும் அல்லம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தங்களது வெற்றிக் கொடியினை நாட்டியுள்ளது இந்த பட்டு நிறுவனம்.

ஜோஹோ

ஜோஹோ

ஐடி துறையினர் நிச்சயம் ஜோஹோவை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. குறிப்பாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பற்றி பலரும் கேள்விப் பட்டிருக்கலாம். அமெரிக்காவில் பணி புரிந்திருந்தாலும், தாய் நாட்டின் மீதான பற்றால், இன்று சென்னையில் அலுவலகத்தினை தொடங்கி வெற்றி கரமாக பல சர்வதேச நாடுகளுக்கும் ஐடி சேவை செய்து வருகின்றது. இவர் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்தவர். கிட்டதட்ட 10,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதன் கடந்த ஆண்டு வருவாய் விகிதம் 5000 கோடி ரூபாய்க்கு மேல்.

எம்ஆர்எஃப்

எம்ஆர்எஃப்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டயர் நிறுவனம் எம் ஆர் எஃப் (Madras Rubber Factory) ஆகும். இதன் நிறுவனர் மாம்மென் மாப்பிள்ளை. இது டயர் மட்டும் அல்ல பல்வேறு விளையாட்டு சாதனங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பெயிண்டுகள், என உற்பத்தி செய்து விற்பனை செய்தும் வருகின்றது. இதன் இன்றைய வருமானம் சுமார் 8,000 கோடிக்கு மேல். இந்த நிறுவனத்தில் சுமார் 18,000 பேர் பணி புரிந்து வருகின்றனர்.

டிவிஎஸ்

டிவிஎஸ்

டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார் வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். அதன் பிறகு ரயில்வே பின்னர் வங்கி என பல துறைகளிலும் பணியாற்றியவர். இப்படி பல்வேறு அடையாளங்களை கொண்ட ஒருவரால் உருவாக்கப்பட்ட டிவிஎஸ் பிராண்ட், இன்று உலகின் பல நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாகும். இதன் தலைமையகமும் சென்னை. சுமார் 5,000 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றுகின்றனர். இதன் வருட வருமானம் சுமார் 20,000 கோடிக்கு மேல்.

கவின்கேர்

கவின்கேர்

சென்னையை தலைமை இடமாக கொண்டது இந்த நிறுவனம், இதன் தலைவர் சிகே ரங்க நாதன் கடலூரை சேர்ந்தவர். கவின் கேர் நிறுவனம் பால்,பால் சம்பந்தபட்ட பொருட்கள், பல்வேறு உணவு பொருட்கள் என பல வணிகங்களை செய்து வருகின்றது. இது தவிர பல்வேறு பர்சனல் கேர் பொருட்களையும் உற்பத்தி வருகின்றது. மொத்ததில் பல்வேறு வகையாக பிராண்டுகளை கொண்ட ஒரு கூட்டு நிறுவனமாகும். 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரியும் இந்த நிறுவனத்தின் வருவாய், 500 கோடி ரூபாய்க்கு மேல்.

முருகப்பா குழுமம்

முருகப்பா குழுமம்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பழைமையான நிறுவனங்களில் ஒன்று முருகப்பா குழுமம். தற்போது இதன் தலைவர் ஏ வெள்ளையன் ஆவார். இது சைக்கிள், சர்க்கரை,, உரம் என பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றது. இந்த குழுமத்தில் தற்போது 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதன் வருவாய் சுமார் 41,000 கோடி ரூபாய்க்கு மேல்.

ராம்ராஜ் காட்டன்

ராம்ராஜ் காட்டன்

இன்று வேட்டி என்றாலே நினைவுக்கு வருவது ராம்ராஜ் காட்டன் தான். அந்தளவுக்கு பேர் போன இந்த நிறுவனத்தின் தலைவர் கே ஆர் நாகராஜன். தனியாளாக இந்த நிறுவனத்தினை தொடங்கிய இவர், இன்று 4,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இதன் வருவாய் விகிதம் ஆண்டுக்கும் சுமார் 1,300 கோடி ரூபாயாகும். இவரின் சொந்த ஊர் அவினாசி அருகில் உள்ள ஒரு கிராமமாகும்.

மேற்கண்ட நிறுவனங்களுக்கு போட்டியாக பலவும் இருந்தாலும், இன்றளவிலும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிறுவனங்களாக மட்டும் அல்லாமல், பல ஆயிரம் பேருக்கு வாழ்வளிக்கும் நிறுவனங்களாகவும் உள்ளன.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Do you know which are the best companies that have made Tamil Nadu proud?

Do you know which are the best companies that have made Tamil Nadu proud?/தமிழகத்திற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ள சிறந்த நிறுவனங்கள் எது எது தெரியுமா?

Story first published: Thursday, May 19, 2022, 20:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.