முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில
காங்கிரஸ்
முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங் என்பவருக்கும் கடந்த 1987ஆம் ஆண்டில் வாகன நிறுத்துமிடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சித்து மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் இணைந்து குர்னாம் சிங்கை தாக்கியதாக தெரிகிறது. இதில், அவர் உயிரிழந்து விட்டார்.
சித்துவும், அவரது நண்பரும் தாக்கியதாலேயெ குர்னாம் சிங் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்றம், போதுமான ஆதரமில்லை என கூறி சித்துவை விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சித்துவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து
நவ்ஜோத் சிங் சித்து
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, சித்துவுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கில் சித்துவுக்கு எதிராக போதிய சாட்சியம் இல்லை என்று கூறி ரூ.1000 மட்டும் அபராதமாக விதித்து அவரை 2018ஆம் ஆண்டில் விடுவித்து
உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது. எனினும், அந்த உத்தரவை மறுஆய்வு செய்யமாறு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். இதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.