நாட்டிலேயே முதன் முறையாக அரசு ஓடிடி தளத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது.
அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு சி ஸ்பேஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன், கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 1ஆம் தேதி அந்த ஓடிடி தளம் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
இதன் மூலம் மலையாள திரைப்படத்துறை அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறும் என்றும், உயர் தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் அந்த தளம் செயல்படும் என்றும் செரியன் குறிப்பிட்டார்.
மேலும், மற்ற ஓடிடி தளம் போல் மொத்தமாக கட்டணம் செலுத்தாமல், குறிப்பிட்ட திரைப்படத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.