கொடுக்கல் வாங்கல் பிரச்சினை யில் வியாபாரியை கழுத்தறுத்துக் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தென்காசியை சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசியில் இருந்து நெல்லை செங்கல்பட்டக்கு பால்ராஜ் அனுப்பி வைத்த நிலையில் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் ரமேஷீன் வீட்டிற்கு வந்து பால்ராஜ் அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவரும் அங்குள்ள மலைப்பகுதியில் மது அருந்தினர். போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ரமேஷ் கீழே தள்ளி கொலை செய்ததார்.
இதனை அடுத்து காவல் நிலையம் சென்ற ரமேஷ் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.