ஜகர்தா: பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை வரும் 23ல் இருந்து விலக்கிக் கொள்வதாக இந்தோனேஷியா அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்தார். இதன் காரணமாக அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் பாமாயில் விலை உயர்ந்தது.
உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. அரசின் முடிவின் காரணமாக பாதிப்பு அடைந்த விவசாயிகள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தோனேஷியாவில் தற்போது 60 லட்சம் டன் பாமாயில் கையிருப்பில் உள்ளதால் ஏற்றுமதிக்கு விதித்த தடையை பரிசீலிக்குமாறு அரசுக்கு எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து பாமாயிலுக்கான ஏற்றுமதிக்கு தடை விலக்கப்படுவதாக இந்தோனேஷியா அறிவித்துள்ளது.
பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீங்கியதால் அதை இறக்குமதி செய்யும் பல்வேறு நாடுகளிலும் அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஜகர்தா: பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை வரும் 23ல் இருந்து விலக்கிக் கொள்வதாக இந்தோனேஷியா அரசு அறிவித்துள்ளது. nsimg3033424nsimg கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.