பெங்களூருவில் 24 மணி நேரமாகக் கொட்டி தீர்த்த கனமழையால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உல்லால் பகுதியில் உள்ள ஏரி அருகே காவிரி குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கனமழை பெய்து மழை வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததால் குழிக்குள் சிக்கிய அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் ராஜராஜேஸ்வரி நகர், ஒசகெரஹள்ளி, கோரமங்கலா ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.