பெங்களூரு: சின்னத்திரை நடிகை உயிரிழந்த விவகாரம் – விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு சீல்

பெங்களூருவில் சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனைக்கு சீல் வைத்து, சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரு புறநகர் மாவட்டம் வீரேனபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தனா ராஜ். சின்னத்திரை நடிகையான இவர், கீதா, தோரேசானி, ஒலவின நில்தன உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி ராஜாஜி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க, கொழுப்பு அறுவை சிகிச்சையை நடிகை சேத்தனா ராஜ் செய்து கொண்டார்.
image
அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் சின்னத்திரை நடிகைகள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நடிகை சேத்தனா ராஜ் மரணம் குறித்து, அவரது தந்தை வரதராஜ் சுப்பிரமணிய நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனியார் மருத்துவமனை மருத்துவரின் அலட்சியமே தனது மகளின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, சுப்பிரமணிய நகர் போலீசார், நடிகை சேத்தனா ராஜ் இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்திருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் நடிகை சேத்தனா ராஜ் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
image
இந்நிலையில், சேத்தனா ராஜ் மரணடைந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்து, மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.