பெண்கள் விளையாட்டு கழகம்அமைச்சர் திறந்து வைத்தார்

புதுச்சேரி, லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கம் அருகில் பெண்களுக்கான முத்துலட்சுமி அம்மாள் விளையாட்டு கழகம் திறப்பு விழா நடந்தது.கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம், விளையாட்டுக் கழக பெயர் பலகையை திறந்து வைத்தார்.சிறப்பு விருந்தினர்கள் புதுச்சேரி ஒலிம்பிக் சங்க தலைவரும், அமைச்சருமான தேனீ ஜெயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், சிவசங்கர், எம்.பி., செல்வகணபதி ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர்.பின்னர், ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேனீ ஜெயக்குமாரை அலுவலக இருக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் அமர வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.