சென்னை: மண்டல குழுக்கள் அமைக்கப்பட்ட பிறகு முதல் மாமன்றக் கூட்டம் இம்மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சியின் 2022– 23ம் பட்ஜெட் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, மண்டலக் குழுத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மண்டல அளவிலான முதல் கூட்டம் இந்த மாதம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், மண்டல அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிலைக்குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலைக்குழுவில், மண்டல தீர்மானங்கள் அடிப்படையில், எந்தெந்த பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கவுன்சில் கூட்டம், வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்குமாறு, மாநகராட்சி மேயர் பிரியா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மண்டல அளவில் அனுப்பிப்பி வைக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் பெறுவது, மாநகராட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்தும் ஆலோசிப்பது உள்ளிட்டவை நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.