மதுரை: சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதல்: பெண்களை ஏமாற்றியதாக இருவர் கைது

சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்களை ஏமாற்றியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தனியார் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான கவிபாலன் என்ற இளைஞர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வந்த நிலையில், நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு நேரில் சந்தித்ததோடு பல்வேறு இடங்களுக்கும் சென்றதாக கூறப்படுகிறது.
image
மேலும் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அவரை பலமுறை பாலியல் வன்கொடுமையும் செய்ததாக கூறப்படுகிறது. மாணவியின் காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்த நிலையில், வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிபாலனிடம் மாணவி கேட்டுள்ளார்.
இந்நிலையில் தனக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டதாகவும், தன்னை மறந்துவிடுமாறும் கவிபாலன் கூறியதால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, மதுரை மாநகர காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணை ஏமாற்றிய கவிபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
image
அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் மதுரை பாத்திரக்கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான 22 வயதான முகமது பைசல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு இளம்பெண்ணை முகமது பைசல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். கல்லூரி மாணவரான பைசலிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள இளம்பெண் கேட்ட நிலையில், மதத்தை காரணம்காட்டி இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் காவல்துறையில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஃபேஸ்புக் மூலம் பழகி ஏமாற்றிய இளைஞர் பைசலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம் பெண்கள் இருவர் சமூக வலைதள மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக ஏமாற்றப்பட்டு இரண்டு இளைஞர்கள் கைதாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.