மத்தி மீன்கள் விலை உயர்வு – போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம்

மத்தி மீன்களுக்கு உரிய விலை கிடைத்தும், கடல் காற்று காரணமாக  போதிய அளவுக்கு மீன்கள் வலையில் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61  நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக விசைப்படகு மற்றும் இழுவைப்படகுகள் ஆழ்கடல் தொழிலுக்குச் செல்லாமல் படகுகளை பழுதுநீக்கம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையை  குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்:  சிக்கலுக்கு தீர்வு என்ன? #பிபிசி கள ஆய்வு - BBC News தமிழ்

கடந்த சில நாட்களாக நாகை மாவட்ட கடற்கரையோரப் பகுதிகளில் மத்தி மீன்கள் அதிகம் கிடைத்து வந்தது. கடந்த வாரத்தில் மத்தி மீன்கள் அதிகம் கிடைத்தும் உரிய விலை கிடைக்கவில்லை என கவலை அடைந்தனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ மத்தியின் விலை 30 லிருந்து 50 ரூபாய் வரை மட்டுமே விற்பனையான  நிலையில்,  நாகை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகமாக கடல் காற்று வீசி வருவதால் கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் குறைந்த அளவே கடலுக்கு சென்று வருகின்றனர்.
nagai mathi fish: மத்தி மீன் கிலோ ரூ. 80, மீனவர்களும் ஹெப்பி: கேரளா வரை  விற்பனையாகிறது! - nagai mathi fish sale per kg price 80 rs to 100 rs  fishermen are happy to send to kerala | Samayam Tamil

தற்போது மீன் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ மத்திமீன் விலை 110 ரூபாய் விற்பனையானது. இதனால் நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், செருதூர், சாமந்தான் பேட்டை, புஷ்பவனம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 26 மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தாலும் தங்களது வலைகளில் குறைவான மீன்களே சிக்கி வருவதால் கவலை அடைந்துள்ளனர். ஆனாலும், பிடித்து வந்த மீன்களுக்கு உரிய விலை கொடுத்து வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இதனால் தற்போதைய மத்தி மீன் விலை உயர்வு மீனவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், மீன் வரத்து குறைந்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.