பீஜிங்-சீனாவில், 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படும் ‘குசி – அடிடாஸ் பிராண்டு’ குடையில் மழை நீர் ஒழுகுவதாக வெளியான செய்தியை, 14 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் படித்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த குசி நிறுவனம், விலையுயர்ந்த கைப்பைகள், ஆயத்த ஆடைகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.அதுபோல ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், உடைகள் விற்பனையில் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், குசி மற்றும் அடிடாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் குடையை, சீனாவில் 1.23 லட்சம் ரூபாய்க்கு விற்கின்றன. இதை வாங்கிய ஒருவர், ‘குடைக்குள் மழை நீர் ஒழுகுகிறது’ என, ‘வெய்போ’ சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை, 14 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டதை அடுத்து, உலகளவில் பரபரப்பான செய்தியானது.
இதற்கு அடிடாஸ், குசி நிறுவனங்கள் இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை.சீனா, உள்ளூர் நிறுவன தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால், அன்னிய நிறுவனங்களின் தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க துவங்கியுள்ளனர்.
Advertisement