மதுரை: ஜி.எஸ்.டி. பரிந்துரையை மாநிலங்கள் ஏற்கவில்லை எனில் செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். விருப்பப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளை ஏற்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தலாம். தற்போது வந்துள்ள தீர்ப்பு, மாநில உரிமைக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும், முதலமைச்சரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்று அமைச்சர் குறிப்பிட்டார்.