முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவு| Dinamalar

காபூல்: முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாலிபான் தனது பிற்போக்குத் தனமான ஷரியா சட்டம் மூலமாக அந்நாட்டின் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றது.

ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முகத்தை முழுவதுமாக மூடியபடி பணி நேரத்தில் உடை அணிய வேண்டும் உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்தியது. இதையும் மீறி பெண்களுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் வழங்கக் கூடாது என்று சட்டம் வகுத்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.