நாஜி வதைமுகாம்கள் பற்றியும் யூதர்களின் படுகொலைப் பற்றியும் எடுக்கப்பட்ட படங்களில் பார்க்க வேண்டிய சில படங்கள் பற்றிய Photo Story.
Schindler’s List: ஹிட்லரின் வதை முகாம்களில் கொடுமைக்குள்ளாகும் யூதர்களை, அடிமைகளாக வாங்க வரும் தொழிலதிபர் மனம் மாறி தன்னிடம் இருக்கும் மொத்த பணத்தையும் வைத்து தன்னால் முடிந்த நூற்றுக்கணக்கான யூதர்களை வாங்கி அவர்களை விடுவிக்கும் நெகிழ்ச்சிக் கதை இது.
The Diary of Anne Frank: யூத இனத்தைச் சேர்ந்த Anne Frank என்ற இளம்பெண் எப்படியெல்லாம் நாஜி படைகளிடமிருந்து தப்பி மறைந்து வாழ்கிறார் என்பதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘The Diary of Anne Frank’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
The Pianist: பியானோ இசைக் கலைஞனாக இருக்கும் இளைஞன் ஒருவன் நாஜி படைகளிடமிருந்து தப்பிப் பிழைப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டப் படம் இந்த ‘The Pianist’. அமைதி நிறைந்த இனிமையான பியானோ இசையில் ஆரம்பமாகும் படம் வெடிகுண்டு சத்தத்தால் நிறைந்து மீண்டும் அமைதியை நோக்கி பயணிக்கும் படம் இது.
Life Is Beautiful: மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழும் யூத இனத்தைச் சேர்ந்தவரின் மகன் நாஜி வதைமுகாம்களில் மாட்டிக்கொள்கிறான். மாட்டிக்கொண்ட மகனை தன் திறமையால் காப்பாற்றும் கதை இது. கொடூரமான வரலாற்றை நகைச்சுவையாக அனுகியிருக்கும் இப்படம் மிகமுக்கியமான படம்.
The Boy in the Striped Pajamas: இரண்டு எதிரெதிர் சூழலில் இருக்கும் நாஜி இனத்தைச் சேர்ந்த சுதந்திரமான சிறுவனும் வதை முகாமில் சிறைப்பட்டிருக்கும் யூத சிறுவனும் நட்பு கொண்டு சேர்ந்து விளையாட முயலும் கதை இது. இரண்டு சிறு குழந்தைகளின் வழியே நாஜி-யூத பிரச்சனையை அனுகியிருக்கும் விதம் இப்படத்தின் சிறப்பாகும்.
Night and Fog: நாஜி சித்தாந்தத்தின் எழுச்சியை விவரிக்கும் விதமாகத் தொடங்கும் இப்படம் நாஜி வதை முகாம்களில் நடக்கும் மரணதண்டனைகள், கொத்துக்கொத்தாக உயிரைக் கொல்லும் வாயு அறைகள் மற்றும் உடல் குவியல் எரிப்பு பற்றி விவரிப்பதாக அமைந்தித்துள்ள படமாகும்.
Shoah: 1985 ஆம் ஆண்டு வெளியான இப்படம் நாஜி வதைமுகாம்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள், சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் என யூதர்களின் படுகொலை பற்றியும் நாஜி வதைமுகாம்கள் பற்றியும் விரிவாகப் பேசும் வகையில் எடுக்கப்பட்ட படமாகும்.
The counterfeiters: காதல் கதை வழியாக நாஜி வதைமுகாம்களின் கொடூரத்தை விளக்கியிருக்கும் படம். தன் காதலன் யூத இனத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்துகொண்ட காதலி காதலனைத் தவிர்க்க முயலும்போது நாஜி வதைமுகாமிலிருந்து தப்பிய தன் கடந்த காலத்தைப் பற்றி காதலன் விளக்குவதுதான் இப்படத்தின் கதை.
Europa Europa: நாஜி மக்கள் வாழும் ஜெர்மனியில் குடும்பத்துடன் வசிக்கும் இளைஞனின் வாழ்வியல் மற்றும் அவன் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் படம் இது.
Judgement at Nuremberg: யூதர்கள் படுகொலை பற்றி எடுக்கப்பட்ட ‘The Holocaust’ படங்களின் நிறைவாக அமைந்திருக்கும் படம் இது. நாஜி வதை முகங்களில் யூத படுகொலையில் ஈடுபட்ட முக்கிய அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தலைவர்கள் என அனைவருக்கும் தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மையமாக வைத்து எடுக்கபட்ட படம் இது.