கேரள மாநிலம் திருச்சூரில் மங்களா விரைவு ரயிலின் எஞ்சின், பெட்டியில் இருந்து பிரிந்து சென்ற நிலையில், ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
எர்ணாகுளத்தில் இருந்து நிஜாமுதீன் சென்றுக் கொண்டிருந்த அந்த ரயில், திருச்சூர் ரயில் நிலையத்தை கடந்தபோது அதன் எஞ்ஜின், பெட்டியில் இருந்து பிரிந்து சென்றது.
உடனடியாக இதனை உணர்ந்த ரயில் ஓட்டுனர், துரிதமாக செயல்பட்டு எஞ்சினை நிறுத்தினார். பெட்டியில் இருந்து பிரிந்து சென்ற சில மீட்டர் தூரத்திலேயே எஞ்சின் நிறுத்தப்பட்ட நிலையில், 10 நிமிடத்தில் மீண்டும் இணைக்கப்பட்டதால் ரயில் போக்குவரத்து உடனே சீரானது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வேத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.