ரஷ்ய தளபதிளை பதவியில் இருந்து நீக்கிய புடின்: பிரித்தானிய உளவுத்துறை தகவல்


உக்ரைன் போரில் மோசமாக செயல்பட்டதிற்காக ரஷ்யாவின் இரண்டு மூத்த ராணுவ தளபதிகளை ஜனாதிபதி புடின் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கி இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர் மூன்று மாதங்களாக நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் கைப்பற்ற முடியாமல் தங்களது இருப்புகளில் இருந்து பின்வாங்கி, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதி நகரங்களான டான்பாஸின் மீது கவனம் செலுத்து வருகின்றன.

ரஷ்யாவின் முக்கிய குறிகோள் ரஷ்ய ஆதரவாளர்களின் பகுதியான டான்பாஸை விடுவிப்பதே என ரஷ்ய அரசு வட்டாரங்கள் தற்போது தெரிவித்தாலும், தலைநகர் கீவ்-வை கைப்பற்றமுடியாமல் ரஷ்ய படைகள் பின்வாங்கியது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாகவே உலக நாடுகளால் பார்க்கப்பட்டு வருகிறது.

ரஷ்ய தளபதிளை பதவியில் இருந்து நீக்கிய புடின்: பிரித்தானிய உளவுத்துறை தகவல்

இந்தநிலையில், உக்ரைன் போரில் மோசமான செயல்திட்டங்களை செயல்படுத்தியற்காக ரஷ்யாவின் இரண்டு மூத்த ராணுவ தளபதிகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கி இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரித்தானிய உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், உக்ரைனின் கார்கிவ் நகரை கைப்பற்ற தவறியதற்காக லெப்டினன்ட் ஜெனரல் செர்ஹி கிசெல் மற்றும் சோவியத் கால போர்கப்பலான மாஸ்க்வாவை இழக்க செய்தற்காக அதன் துணை அட்மிரல் இகோர் ஒசிபோவ் ஆகிய இருவரையும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷ்ய தளபதிளை பதவியில் இருந்து நீக்கிய புடின்: பிரித்தானிய உளவுத்துறை தகவல்

மேலும் பொதுப் பணியாளர்களின் தலைவர் வலேரி ஜெராசிமோவ் அவரது பணியில் தொடர்வதாக நம்புவதாகவும், ஆனால் அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினின் நம்பிக்கையை தற்போதும் பெற்றுள்ளாரா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: சட்டப்பூர்வமான கருணைக்கொலை: எழுந்த கடும் விமர்சனம்

ரஷ்ய தளபதிளை பதவியில் இருந்து நீக்கிய புடின்: பிரித்தானிய உளவுத்துறை தகவல்

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்ய ராணுவத்தில் மறைப்பு கலாசாரம் பரவலாக காணப்படுவதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.