புது டெல்லி:
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் மார்ச் 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.
இந்த சேவை நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளிலும் குறைந்துள்ளதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரெயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
டாக்காவிலிருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் வங்காளதேச ரெயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ஆகியவை கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் மே 29, 2022 அன்று மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.