வரம்பை மீறும் பெண்களுக்கு மட்டுமே வீட்டு சிறை: தாலிபான்களின் புதிய ஆணை

பெண்கள் உரிமைகள் குறித்து பேசியுள்ள தாலிபான்கள், தங்கள் ஆட்சியில் வரம்பை மீறும் பெண்கள் மட்டுமே  வீட்டு சிறையில் வைப்போம் எனக் கூறியுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களை ஒடுக்கும்  வகையில் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கவலைகளை வெளியிட்ட நிலையில், இப்போது பெண் உரிமைக்கு நாங்கள் எதிரி அல்ல என்பது போல் பேசியுள்ளனர்.

இப்போது புதிய ஆணையை வெளியிட்டுள்ளனர். தாலிபான் தலைவர் ஒருவர், தான் பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஆனால், வரம்பை மீறும் பெண்கள் வீட்டில் சிறையில் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். பெண் உரிமைகள் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் தலிபான்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!

பெண்கள் உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக தாலிபான் அரசின் அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி தெரிவித்தார். பெண்கள் உரிமைகள் குறித்து தலிபான் அரசு விரைவில் நல்ல செய்தியை வெளியிடும் என்று ஹக்கானி கூறினார். இருப்பினும், ‘வரம்பை மீறும் பெண்கள்’ வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் ஆட்சி நிறுவப்பட்டதில் இருந்து ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். தலிபான்கள் பெண்களின் கல்வியை நிறுத்தியதோடு, அவர்கள் வேலை செய்யவும், வீட்டிற்கு வெளியே வரவும் தடை விதிக்கபட்டது. தலிபான்கள் முதலில் பெண்களின் கல்வியை நிறுத்தினார்கள். போராட்டம் நடந்தபோது, ​​ஆறாம் வகுப்பு வரையிலான பெண்கள் மட்டுமே பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனுடன், பெண்களின் உடைகள் உட்பட பல விஷயங்களுக்கும் தலிபான்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் பெண்களை உயர்நிலைப் பள்ளிக்கு தாலிபான் அரசு அனுமதிக்கும் என்று சிராஜுதீன் ஹக்கானி கூறியுள்ளார். எனினும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். ஹக்கானி இந்த பெண்களை ‘வரம்பை மீறும்’ பெண்கள் என்று பெயரிட்டுள்ளார். இந்த பெண்கள் எதிர்க்கட்சிகளின் கட்டளையின் பேரில் அரசாங்கத்தை பிரச்சனையில் சிக்க வைக்க முயலுகிறார்கள் என்று ஹக்கானி கூறினார்.

மேலும் படிக்க | பாலியல் அடிமை முதல் தீக்குளிப்பது வரை; ஆப்கான் பெண் நீதிபதி விவரித்த திகில் சம்பவங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.