வருமான வரியை அளிக்கப்படும் காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், 2022-2023 நிதியாண்டு முதல் கூடுதலாக டிடிஎஸ் செலுத்த வேண்டும் என வருமான வரி சட்டம் பிரிவுகள் 206AB மற்றும் 206CCAA கூறுகின்றன.
2022-2023 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையைப் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
அமெரிக்க கோடீஸ்வரர்கள் வரி செலுத்துவதை எவ்வாறு தவிர்க்கிறார்கள் தெரியுமா?
புதிய விதி
வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்குக் கூடுதல் டிடிஎஸ்ஸ் பிடிக்கும் விதி, நிதி சட்டம் 2021 கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த டிடிஎஸ் பிடித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என அறிவிக்கப்பட்டு இருந்தது.
லேட்டஸ்ட் அறிவிப்பு
ஆனால் 2022, மே 17-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்ற விதியை ஒரு வருடமாகக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது.
கூடுதல் டிடிஎஸ்
எனவே 2022-2023 நிதியாண்டுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் சில பரிவர்த்தனைகளுக்குக் கூடுதல் டிடிஎஸ் செலுத்த வேண்டும். முந்தைய ஆண்டின் வருமான வரி தாக்கல் சட்டப்பிரிவு 139-ன் துணைப்பிரிவு (I) காலாவதியானதாக கருதப்படும்.
வரம்புகள்
இந்த புதிய விதி முந்தைய நிதியாண்டில் டிடிஎஸ், டிசிஎஸ் இரண்டும் சேர்த்து 50,000-க்கும் அதிகமாக இருப்பவர்கள்தான் பொருந்தும். டிடிஎஸ், டிசிஎஸ் இரண்டும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் பொருந்தாது.
மேலும் இந்த புதிய விதி வெளிநாடுகளில் உள்ள என்ஆர்ஐ-கள் மற்றும் பான் எண் இல்லாதவர்களுக்குப் பொருந்தாது.
வருமான வரி அளவீடு – புதிய வரி விதிப்பு முறை
₹0 – ₹2,50,000 : 0
₹2,50,001 – ₹5,00,000 : 5%
₹5,00,001 – ₹7,50,000 : ₹12500 + ₹5,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 10%
₹7,50,001 – ₹10,00,000 : ₹37500 + ₹7,50,000 மேல் இருக்கும் தொகைக்கு 15%
₹10,00,001 – ₹12,50,000 : ₹75000 + ₹10,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 20%
₹12,50,001 – ₹15,00,000 : ₹125000 + ₹12,50,000 மேல் இருக்கும் தொகைக்கு 25%
₹15,00,000 மேல் : ₹187500 + ₹15,00,000 மேல் இருக்கும் தொகைக்கு 30%
அபராதம்
வருமான வரி தாக்கல் செய்ய பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பிறகு வரும் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்றால் குறைந்தது 1000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு காலாண்டாக தாமதம் ஆகும் போது சிறை தண்டனை கூட விதிக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த அபராதம் சிறை தண்டனை எல்லாம் வரி செலுத்தும் அளவை பொறுத்தது.
Not Filing Income Tax Return? Get Ready To Pay Higher TDS in FY 2022-23
Income Tax Alert! Not filed ITR? Get Ready To Pay Higher TDS in FY 2022-23 | வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? 2022-2023 முதல் கூடுதல் டிடிஎஸ் செலுத்த வேண்டும் தெரியுமா?