புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த சேவைகள் சில இடங்களில் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொல்கத்தா மற்றும் வங்கதேச நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் மார்ச் 2020ல் நிறுத்தப்பட்டன. டாக்காவில் இருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் வங்கதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவில் இருந்து இந்திய ரயில்வே ரேக் மூலம் மே 29, 2022 அன்று மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளிட்டுள்ளது.