எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க
நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு
உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால்
சுகாதார ஊழியர்களுக்கான சம்பள குறைப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,