வெற்றியை உறுதி செய்த ஒற்றை கேட்ச்; லக்னோ திரில் வெற்றி! மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி



கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் எடுத்த 2 விக்கெட்டுகள் லக்னோ அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

நாணயசுழற்சியை வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் கே எல் ராகுல் – குயின்டன் டி காக் ஜோடி ஆரம்பம் முதலே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, கொல்கத்தா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. டி காக் 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

சௌதீ வீசிய 19-வது ஓவரில் ராகுல் – டி காக் ஜோடி 4 சிக்சர்கள் அடித்தார்.

ரசல் வீசிய ஓவரில் டி காக் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் அடித்தார். இறுதியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 210 ஓட்டங்கள் குவித்தது.

டி காக் 70 பந்துகளில் 140 ஓட்டங்களும், ராகுல் 51 பந்துகளில் 68 ஓட்டங்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 211 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் வெங்கடேஷ் அய்யர் ஓட்டம் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். மற்றொரு வீரர் தோமர் 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

கடைசி ஓவரில் 22 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி வெற்றி முனைப்பில் இருக்க, மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய முதல் மூன்று பந்துகளில் சிக்ஸர், பவுண்டரி மற்றும் சிக்ஸர் என வெளுத்து வாங்கினர். 4-வது பந்தில் மேலும் 2 ஓட்டங்களை சேர்த்தனர். 5-வது பந்தை ரிங்கு சிங் தூக்கி அடிக்க, படுவேகத்தில் ஓடிவந்த லெவிஸ் கேட்ச் பிடித்தார். அந்த ஒரு கேட்ச் லக்னோவுக்கு மீண்டும் உயிரை கொடுத்தது.

கடைசி பந்துக்காக உமேஷ் யாதவ் களமிறங்க, ஸ்டோனிஸ் அந்த பந்தை நேராக ஆப்ஃ ஸ்டம்பிற்கு வீசி லக்னோவுக்கு வெற்றியை தேடித் தந்தார்.

நிதிஷ் சர்மா 42 ஓட்டங்களும் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 50 ஓட்டங்களும் குவித்தனர். சாம் பில்லிங்ஸ் 36 ஓட்டங்ககள் அடித்தார். ரிங்கு சிங் 40 ஓட்டங்கள் அடித்தார். சுனில் நரேன் 21 ஓட்டங்கள் அடித்த நிலையில் களத்தில் இருந்தார்.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் அடித்தது. இதனால் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மொஹ்சின் கான், மார்கஸ் ஸ்டோனிஸ் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.