2021-2022 நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் வேலைவாய்புகள் உருவாக்கிய நகரம் என்ற பெருமையைப் பெங்களூரு பெற்றுள்ளது. டெல்லி மற்றும் மும்பையை விட பெங்களூருதான் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப (IT) பொறியாளர்கள் நாட்டில் அதிக ஊதியம் பெறுகின்றனர் என ஹைரெக்ட் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை கூறுகிறது.
பெங்களூரு
2021-2022 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 17.6 சதவீதத்துடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
மும்பை & டெல்லி
புதிய வேலைவாய்ப்பு உருவாக்கலில் 11.5 சதவீதத்துடன் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. மும்பை 10.4 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் துறை, இப்போது தொற்று பாதிப்பு குறையத் தொடங்கிய உடன் மீண்டும் வேகமெடுத்துள்ளது. நொய்டாவில் 6 சதவீத வேலைவாய்ப்பு உவக்கப்பட்டுள்ளது.
விற்பனை மற்றும் வணிக மேம்பாடு துறை
அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட துறையாக 26.9 சதவீதத்துடன் விற்பனை மற்றும் வணிக மேம்பாடு துறை உள்ளது.
ஐடி மற்றும் ஐடி சேவைகள்
ஐடி மற்றும் ஐடி சேவைகள் துறையில் 20.6 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மார்கெட்டிங்
மார்க்கெட்டிங் துறையில் 9.9 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 0.3 சதவீதத்துடன் கொள்முதல் அல்லது வர்த்தகம் துறை உள்ளது.
அதிக சம்பளம் அளிக்கும் வேலைவாய்ப்புகள்
நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களாக ஐடி இஞ்னியர்கள் உள்ளார்கள். விற்பனை மற்றும் வணிக மேம்பாடு துறை உள்ளது. மார்க்கெட்டிங் துறை 3வது இடத்திலும், ஆப்ரேஷன்ஸ் 4வது இடத்திலும் தொடர்ந்து பிற துறைகளும் உள்ளன.
மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீடு
ஏப்ரல் மாதம் வெளியான மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீடு படி கொரோனாவிற்கு பிறகு மும்பையில் 21 சதவீதம் வரை வேலைவாய்ப்பு சந்தை வேகம் எடுத்துள்ளது. தொடர்ந்து கோயம்புத்தூர், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, புனே, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட நகரங்கள் உள்ளதாகக் கூறியிருந்தது.
Bengaluru Created Highest Employment In 2021-2022. How About Mumbai, Delhi and Chennai
Bengaluru Created Highest Employment In 2021-2022. How About Mumbai, Delhi and Chennai