2 நாளில் 34 பில்லியன் டாலர் நஷ்டம்.. வால்மார்ட் வால்டன் குடும்பம் சோகம்

அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில், எரிபொருள் விலை, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் மூலம் அந்நாட்டு ரீடைல் விற்பனை நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பைப் பங்குச்சந்தையில் எதிர்கொண்டு வருகிறது.

புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்காவின் டார்கெட் நிறுவன பங்குகள் 25 சதவீதம் வரையில் சரிந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போ வால்மார்ட் நிலைமை என்ன தெரியுமா..?

வால்மார்ட் குழுமம்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் உரிமையாளரான வால்மார்ட் குழுமத்தின் தலைவர்களும் வாரிசுகளுமான வால்டன் குடும்பம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 33.7 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர். இந்த மாபெரும் சரிவுக்கு வால்மார்ட் பங்குகள் சரிவு மட்டுமே முக்கியக் காரணமாக உள்ளது.

மார்ச் காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டு முடிவுகள்

இந்த மோசமான நிலைக்கு வழி வகுத்தது வால்மார்ட் வெளியிட்ட மோசமான காலாண்டு முடிவுகள் தான். செவ்வாய்க்கிழமை வெளியிட்ட காலாண்டு முடிவில் வால்மார்ட் பொருட்கள் விலை முதல் போக்குவரத்துச் செலவுகள் வரையில் அனைத்தும் அதிகரித்துள்ள காரணத்தால் லாபம் வருமானம் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரையில் சரிந்தது.

1987 ஆம் ஆண்டு
 

1987 ஆம் ஆண்டு

இந்த மோசமான காலாண்டு முடிவுகளின் வாயிலாக முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் வால்மார்ட் பங்குகள் புதன்கிழமை மட்டும் சுமார் 11.4 சதவீதம் வரையில் சரிந்தது. 1987 ஆம் ஆண்டில் இருந்து இதுதான் மிகவும் மோசமான சரிவு என்பதால் வால்மார்ட்-க்கு இது கருப்பு நாளாக அமைந்துள்ளது.

 4 பேர்

4 பேர்

இதன் மூலம் வால்மார்ட் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களான ஜிம் வால்டன், ராப் வால்டன், அலிஸ் வால்டன், சாம் வால்டன் பிள்ளைகள் என 4 பேரும் அதிகப்படியாக 9 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பை இழந்தனர்

 19.64% சரிவு

19.64% சரிவு

திங்கட்கிழமை வால்மார்ட் பங்குகள் 148.26 டாலராக இருந்த நிலையில் காலாண்டு முடிவுகளுக்குப் பின்பு சுமார் 19.64 சதவீதம் சரிந்து தற்போது 118.80 டாலராக உள்ளது. அடுத்தச் சில நாட்களில் 100 டாலருக்குக் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Walton Family Loses $34 Billion In 2 Days, After Walmart quarterly results

Walton Family Loses $34 Billion In 2 Days, After Walmart quarterly results

Story first published: Thursday, May 19, 2022, 21:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.