அமெரிக்காவில், ஒருவருக்கு ‘குரங்கு காய்ச்சல்’ உறுதிப்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக அதிகாரப்பூர்வமாக முதல் ‘குரங்கு காய்ச்சல்’ தொற்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் அண்மையில் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
குரங்கு காய்ச்சலைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்: டெங்குவுக்கும் குரங்குக் காய்ச்சலுக்கும் தொடர்பு இருக்கிறது.
குரங்குக் காய்ச்சல் நோய், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தை சார்ந்தது. இது குரங்குகளிடமிருந்து பரவுகிறது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் மாசசூசெட்ஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் உறுதிப்படுத்தப்பட்ட வழக்காக பதிவாகியிருக்கும் இந்த பாதிப்புக்கு உட்பட்டவர் ஏப்ரல் இறுதியில் கனடாவுக்குச் சென்று மே மாத தொடக்கத்தில் திரும்பினார் என்று தெரியவந்துள்ளது. அந்த நபர், கனடாவில் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், 1996 முதல் 1997 வரை குரங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, குரங்கு காய்ச்சல் பாதிப்பு வழக்கு அமெரிக்காவில் முதன்முறையாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த நோய் பரவும் சாத்தியக்கூறுகளை கவனத்தில் கொண்டு, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தை சேர்ந்த நபர், தனது நண்பர்களைச் சந்திப்பதற்காக ஏப்ரல் இறுதியில் கனடாவுக்குச் சென்று மே மாத தொடக்கத்தில் திரும்பினார். அவர் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்தியிருப்பதால், வேறு சிலருக்கும் இந்த நோய்த்தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் படிக்க | பசுவின் கன்றுக்கு பால் கொடுக்கும் நாய்
அமெரிக்காவில் பதிவான குரங்கு காய்ச்சலின் முதல் வழக்கு இதுவாகும். கடந்த ஆண்டு, டெக்சாஸ் மற்றும் மேரிலாண்ட் தலா நைஜீரியாவுக்குச் சென்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பாவில் குரங்கு காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை அதிகரித்துள்ளது.
ஐக்கிய இராச்சியம், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலின் சமீபத்திய வழக்குகள் பதிவாகியுள்ளன. ஐரோப்பாவில் ஒருசில வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் அதற்கும் ஒற்றுமைகள் இருக்கிறதான் என்பது இன்னும் தெரியவில்லை.
அமெரிக்காவில் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்படவரின் தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட நபர், கனடாவில் எங்கு சென்றார் என்பதை அமெரிக்க சுகாதாரத் துறை வெளியிடவில்லை.
மேலும் படிக்க | கொழுப்பை குறைத்து உடல் எடையை பராமரிக்க சியா விதைகள்
குரங்கு காய்ச்சல் நோய் ஆபத்தானதாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோயால், பாதிக்கப்பட்ட பத்து பேரில் ஒருவர் இறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
குரங்கு காய்ச்சல் நோய், நிணநீர் முனைகளின் வீக்கத்துடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து முகம் மற்றும் உடலில் ஒரு சொறி போன்ற அலர்ஜி ஏற்படுகிறது.
ஆப்பிரிக்காவில் குரங்குப் காய்ச்சல் நோய் (Monkeypox) அதிகமாக உள்ளது, இது பொதுவாக மக்களிடையே எளிதில் பரவாது. சிறிய விலங்குகள் கடிப்பதால் காய்ச்சல் ஏற்படுகிறது.
ஐரோப்பாவில் பெரும்பாலான வழக்குகள், ஓரினச்சேர்க்கை அல்லது இருபாலின ஆண்களிடம் இருந்ததாகக் கூறுகின்றனர், மேலும் சில நோய்த்தொற்றுகள் உடலுறவின் போது நெருங்கிய தொடர்பு மூலம் பரவும் சாத்தியக்கூறுகள் தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
குரங்கு காய்ச்சல் என்பது, குரங்கு அம்மை போன்ற வைரஸ்களின் குடும்பத்தில் இருந்து வருகிறது. அம்மை தடுப்பூசியானது, குரங்கு காய்ச்சலுக்கு எதிராக செயல்படுகிறது.
குரங்கு பாக்ஸ் வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தடுப்பூசி போடுவதும் சாத்தியமாகும், ஆனால் அது நோய் வெளிப்பட்ட நாளிலிருந்து 4 நாட்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR